உள்ளூர் செய்திகள்

விழாவில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். அருகில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி மற்றும் பலர் உள்ளனர்.

திருப்பத்தூரில் கூட்டுறவு வாரவிழா

Published On 2022-11-21 07:22 GMT   |   Update On 2022-11-21 07:22 GMT
  • திருப்பத்தூரில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் ரூ.30.87 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கினா்.

கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளுவா் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 213 வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர வீட்டு வசதித்துறை, பால்வளத்துறை, சமூக நலத்துறை மற்றும் பட்டுவளா்ச்சித்துறை போன்ற துறைகளிலும் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்த்தில் 2022-23 ஆண்டில் 2022 முடிய அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்கடன் உள்பட மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 139 பேருக்கு ரூ.955.67 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து பணியாளா்களுக்கும் பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்கிடவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நகர வங்கி ஆகியவைகளில் பணியா ற்றும் அனைத்து நிலைகளை சார்ந்தோர்களுக்கும் தனி நிதியம் உருவாக்கி, அவா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சா் பெரியகருப்பன் பேசுகையில், கூட்டுறவே நாட்டுயா்வு என்ற அடிப்ப டையில், கூட்டுறவுத்துறை விவசாயிகள் மற்றும் பொது மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் துறையாக திகழ்ந்து வருகிறது என்றார்.

விழாவில் 3 ஆயிரத்து 586 பயனாளிகளுக்கு ரூ.30கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து 953 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில் கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளா் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ரவிச்சந்திரன், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தலைவா் சேங்கைமாறன், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் தனபால், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், திருப்பத்தூர்பேரூராட்சி தலைவா் கோகிலாராணி, திருப்பத்தூர்ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News