உள்ளூர் செய்திகள்

தேர்பவனி நடந்தது.

குழந்தை தெரசாள் ஆலய தேர்பவனி

Published On 2022-10-05 09:05 GMT   |   Update On 2022-10-05 09:05 GMT
  • மானாமதுரையில் குழந்தை தெரசாள் ஆலய தேர்பவனி நடந்தது.
  • 83-ம் ஆண்டு பெருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புகழ்பெற்ற குழந்தை தெரசாள் ஆலயம் உள்ளது. இங்கு 83-ம் ஆண்டு பெருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை, சிறியபல்லக்கில் குழந்தை தெரசாள் ஆலய வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சியில் இறைசெய்தி வாசிக்கப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி, மின்சார சப்பர தேர்பவனி நடந்தது. அருட்தந்தை செங்கோல் விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் சிறக்க வேண்டியும், மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டியும் திருப்பலி பூஜைகளை நடத்தினார்.

முடிவில் ஆலயம் முன்பு குழந்தை தெரசாள் சொரூபத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் மெயின் கடை வீதி வழியாக பவனி வந்து ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ். பாஸ்டின் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News