குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.
அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
- அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் சமஸ்தானம் தேவஸ் தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத் தலைவி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
விழா கடந்த ஜூன் 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் புரவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட 2 அரண்மனை புரவிகள் உட்பட 282 புரவிகள் சாமி யாட்டத்துடன் சூரக்குடி புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடந்தது.
நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று ஊர் அம்பலகாரர்கள் முன்னிலையில் 282 புரவிகள் ஊர்வலம் நடந்தது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றார். இதில் நகரத்தார் தலைவர் மாதவன் கணே சன், சிவசுப்பிரமணியன், வெள்ளையப்பன், வெங்கடாசலம் காந்திமதி சிவகுமார், ஆனந்த கிருஷ்ணன், தொழிலதிபர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.