உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி

Published On 2023-01-09 08:30 GMT   |   Update On 2023-01-09 08:30 GMT
  • அழகப்பா கல்வி குழும முன்னாள் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி நடந்தது..
  • முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது.

காரைக்குடி

அழகப்பா கல்வி அறக்கட்டளை மற்றும் உலகளாவிய அழகப்பா முன்னாள் மாணவர் கூட்டமைப்பு இணைந்து 75-வது வருட கொண்டாட்டத்தின் நிகழ்வாக அழகப்பா முன்னாள் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை பாவ்நகர் விளையாட்டு அரங்கில் நடத்தியது.

அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவர் ராமநாதன் வைரவன் வழிகாட்டுதலின்படி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போட்டியை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

36 அணிகள் கலந்து கொண்டன. இதன் பரிசளிப்பு விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தலைமை தாங்கினார்.காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது. 2-ம் பரிசு ரூ. 5ஆயிரம் மற்றும் கேடயத்தை அழகப்பா கலை கல்லூரி அணியும், 3-ம் பரிசு ரூ. 2,500 மற்றும் கேடயத்தை பாண்டியன் மெமோரியல் அணியும் வென்றன.

சிறந்த பேட்ஸ்மேனாக கானாடுகாத்தான் சேவாக் அணியின் கார்த்திக், சிறந்த பந்து வீச்சாளராக பாண்டியன் மெமோரியல் அணியின் தினேஷ், தொடர் நாயகனாக அழகப்பா கலை கல்லூரி அணியின் பாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை அழகப்பா கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள் செய்திருந்தனர். கல்வி குழும மேலாளர் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News