ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
- காளையார்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- நீட் தேர்வுக்கு விதி விலக்கு பெறுவோம் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்தார்கள்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கி னார். ஒன்றிய செயலா ளர்கள் சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-
நீட் தேர்வுக்கு விதி விலக்கு பெறுவோம் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு எதையும் செய்யவில்லை. ஊழல் செய்யவில்லை என தற்போதுள்ள தி.மு.க. அமைச்சர்கள் சத்தியம் செய்ய தயாரா? அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சரவணன் மாவட்ட மகளிரணி வெண்ணிலாசசிகுமார் பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட துணை செயலாளர் சதீஸ்பாலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை, பாகனேரி சரவணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் நாகராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சிவக்குமார், பூமி, கவுன்சிலர் பாண்டி கண்ணன் வழக்கறிஞர் நவநிதகிருஷ்ணன் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.