உள்ளூர் செய்திகள்

அருண்குமார்.

ஊழியரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-02-04 07:46 GMT   |   Update On 2023-02-04 07:46 GMT
  • அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
  • ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்தவர் தமிழ் செல்வன். இவருக்கும், ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்த அருண்குமாரின் தாயாருக்கும் தகாத உறவு இருந்தது.

கடந்த 10.4.2019-ந் தேதி இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் அருண்குமார் கேட்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கினைந்த வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு கூறப்பட்டது.

அருண்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

Tags:    

Similar News