உள்ளூர் செய்திகள்

22 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-05-23 08:31 GMT   |   Update On 2023-05-23 08:31 GMT
  • 22 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
  • இலவச தையல் எந்திரங்க ளையும் கலெக்டர் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது.

இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊன முற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 342 மனுக்கள் பெறப்பட்டன.

தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தினார். இதில் வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்புவனம் வட்டத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான மாதாந்திர உதவித்தொகை பெறு வதற்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்க ளையும் கலெக்டர் வழங்கி னார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காதொலிக்கருவி, மடக்கு சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்த 2 மாற்றுத் திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 820 மதிப்பிலான காதொலிக்கருவியும், ரூ.7 ஆயிரத்து 900 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் என மொத்தம் 22 பயனாளி களுக்கு ரூ.70 ஆயிரத்து 720 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News