உள்ளூர் செய்திகள்

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இலவச திருமணம்

Published On 2023-11-17 07:09 GMT   |   Update On 2023-11-17 07:09 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் திருமணத்திற்கான அனைத்து செலவுகளும் கோவிலில் சார்பில் செய்யப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

விழுப்புரம்:

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமண நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கோவில்களில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி செஞ்சியை அருகே சிங்கவரத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள கோனை கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி-தேவகி ஆகியோர் திருமணம் நடைபெற்றது.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் திருமணத்திற்கான அனைத்து செலவுகளும் கோவிலில் சார்பில் செய்யப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் மணமக்களுக்கு ரூ.50ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை உதவி ஆணையர் ஜீவானந்தம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் இளங்கீர்த்தி செய்திருந்தார்.

Tags:    

Similar News