உள்ளூர் செய்திகள்

 சிங்காரப்பேட்டை காப்புகாடு பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்த போது எடுத்த படம்.

சிங்காரப்பேட்டை காப்புகாடு பகுதியில் மான் வேட்டையாடிய இருவர் கைது

Published On 2022-10-13 14:50 IST   |   Update On 2022-10-13 14:50:00 IST
  • ஜவ்வாது காப்புகாட்டில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
  • இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புகாடு பகுதியில், மான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

இதில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகா சதீஷ் கிடிஜாலா உத்தரவின் பேரில், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலர் ரமேஷ், வணவர்கள் முருகன், கோவிந்தன், ராமமூர்த்தி, வனகாப்பாளர்கள் அர்ஜுன், பிரதீப், அரவிந் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது. ஜவ்வாது காப்புகாட்டில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் கலர்பதி பகுதியைச் சேர்ந்த ரவி(30). அதே பகுதியை சேர்ந்த பழனி(40). ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளக்குட்டை பகுதி சேர்ந்த அருண் என்பவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News