உள்ளூர் செய்திகள்

முக்கூடலில் செவிலியரை மாற்றக்கோரி ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

Published On 2022-11-01 09:19 GMT   |   Update On 2022-11-01 09:19 GMT
  • செவிலியர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுவதாக கூறி பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
  • செவிலியரை இடமாற்றம் செய்வதாக டாக்டர் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

முக்கூடல்:

முக்கூடலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

முற்றுகை

இங்கு பணியாற்றும் செவிலியர் ஒருவர், நோயாளிகளை தரக்குறைவாக பேசுவதுடன் அவர்களுக்கு விரைந்து முதலுதவி சிகிச்சை செய்வதில்லை, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமல் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு பொன்னரசு தலைமை தாங்கினார். பார்த்திபன், முத்துசாமி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் வனிதா, சிந்துஜா, ராஜலட்சுமி, ஜெனிஷா மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை அங்கு இருந்த மருத்துவரிடம் தெரிவித்து முற்றுகையிட்டனர்.

கலைந்து சென்றனர்

உடனே செவிலியரை இடமாற்றம் செய்வதாக டாக்டர் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த பணியாாளர்கள் கூறுகையில், இந்த மருத்துவமனையில் 5 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஒரு ஆண் செவிலியர் மற்றும் ஒரு பெண் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் கூட பணிகள் தாமதமாகலாம் என்றனர்.

Tags:    

Similar News