அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் தம்பிதுரை எம்.பி. தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றபோது எடுத்த படம்.
ஓசூர் அதியமான் கல்லூரியில்கருத்தரங்கு - தம்பிதுரை எம்.பி. பங்கேற்பு
- மாணவர்களின் திறன் மேம்பட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பாத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்
- இதில் 40-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்.
ஓசூர்
அதியமான் பொறியியல் கல்லூரி, சென்னை செயின்ட் பீட்டர்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றின் சார்பில், புதிய காலத்திற்கான தொழில்நுட்ப கல்வி" என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் உள்ள விப்ரோ ஆடிட்டோரியத்தில் நடந்த கருத்தரங்கிற்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், "பொறியியல் மாணவர்களின் திறன் மேம்பட பயிற்சி தேவை. மின்சார வாகனங்கள், புதிய மின்கலங்கள் தரவுகளின் அடிப்படையில் தீர்வுகள் செயற்கை நுண்ணறிவு மனிதருடன் இணைந்து செயல்படும் ரோபோக்கள் போன்ற புதிய சூழலில் பொறியியல் பாடத்திட்டத்தில் மாற்றம் அவசியம் என்று வலியுறுத்தினார்.முன்னதாக, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி அறங்காவலர் டாக்டர்.த.லாஸ்யா வரவேற்றார். கருத்தரங்கில் பேசிய பெங்களூருவில் உள்ள இந்திய மின்னணு மற்றும் குறைகடத்தி அமைப்பின் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பைவ் ஸ்கொயர் நிறுவன முதன்மை அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர், மின்சார வாகனங்கள் மற்றும் அதன் பயன்பாட்டில் மென்பொருள் பங்கு, குறைகடத்திகள், சிலிகான் சில்லு, போன்ற பிரிவுகளில் பொறியியல் மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும். தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் தங்கள் மாணவர்களின் திறன் மேம்பட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பாத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று கூறினர். இதில் 40-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர்,செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி அறங்காவலர் டாக்டர்.லாஸ்யா கூறுகையில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, சென்னை செயின்ட் பீட்டர்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம், , கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த திறன் பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.