உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் திருநங்கைக்கு மானியத்துடன் சுயதொழில் கடனுதவி

Published On 2023-11-06 09:07 GMT   |   Update On 2023-11-06 09:07 GMT
  • தள்ளுவண்டி கடை திறப்பு விழாவில் கோட்டாட்சியர் பங்கேற்பு
  • மற்ற திருநங்கைகளுக்கும் உதவ வேண்டும் என கோரிக்கை

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் குன்னூர், ஓட்டுபட்டறை பகுதியை சேர்ந்த திருநங்கை லட்சுமி, சுயதொழில் ஆரம்பிக்க கடனுதவி கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். தொடர்ந்து அவருக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் சார்பில், ரூ.50 ஆயிரம் மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டது.

இதன்மூலம் அவர் தற்போது தள்ளுவண்டியில் சுயதொழில் தொடங்கி நடத்தி வருகிறார்.முன்னதாக திருநங்கையின் தள்ளுவண்டி கடை திறப்பு விழாவில் குன்னூர் கோட்டாட்சியர் பூசனகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து திருநங்கை லட்சுமி கூறியதாவது:-

எனக்கு சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. எனவே நான் அரசிடம் கடனுதவி கோரி விண்ணப்பித்தேன். அவர்கள் என் மனுவை பரிசீலித்து முதன்முறையாக மானியத்துடன் கடனுதவி வழங்கினர்.

இதன்மூலம் நான் தள்ளுவண்டி கடையை துவங்கி நடத்தி வருகிறேன்.திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்து அரசு உதவி செய்தது மகிழ்ச்சி தருகிறது.நீலகிரி மாவட்டத்தில் திருநங்கைகள் அதிகளவில் உள்ளனர். எனவே அவர்களுக்கும் சுயதொழில் துவங்க அரசு தேவையான ஆலோசனைகள் மட்டுமின்றி மானியத்துடன் கடனுதவியும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News