உள்ளூர் செய்திகள்

தன்னம்பிக்கை உரை நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்

சாரதா கல்லூரியில் தன்னம்பிக்கை உரை நிகழ்ச்சி

Published On 2022-11-26 14:52 IST   |   Update On 2022-11-26 14:52:00 IST
  • நெல்லை ஸ்ரீ சாரதா மகளிர் கல்வி நிறுவனங்கள், நெல்லை மற்றும் விருதுநகர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்திய தன்னம்பிக்கை உரை நிகழ்ச்சி கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது.
  • சிறப்பு விருந்தினராக பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தன்னம்பிக்கை கதைகளை கூறி வாழ்வியல் அரங்கல் பற்றியும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மாணவிகளுக்கு அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

நெல்லை:

நெல்லை ஸ்ரீ சாரதா மகளிர் கல்வி நிறுவனங்கள், நெல்லை மற்றும் விருதுநகர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்திய தன்னம்பிக்கை உரை நிகழ்ச்சி கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது.

கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்கா பிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். பள்ளி செயலர் யதீஸ்வரி தவப்பிரியா அம்பா, கல்லூரி முதல்வர் கமலா, பள்ளி முதல்வர் சுந்தரலட்சுமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் கார்த்திகா வரவேற்று பேசினார். நெல்லை ரோட்டரி கிளப்பின் ரோட்டேரியன் மேஜர் டோனர் முத்தையா பிள்ளை உரையாற்றினார்.

வணிக நிர்ம செயல்பாட்டு துறை தலைவர் அருணா தேவி அறிமுக உரை ஆற்றினார். நெல்லை ரோட்டரி கிளப் தலைவர் ராஜேந்திர ரத்தினம், ஆய்வு இயக்குனர் விஜயகுமாரி ஆகியோர் உரை ஆற்றினார்கள்.

சாரதா வித்யாலயா பள்ளி ஆசிரியை சுவர்ணலதா சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுக உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தன்னம்பிக்கை கதைகளை கூறி வாழ்வியல் அரங்கல் பற்றியும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மாணவிகளுக்கு அவசியம் என்றும் அறிவுறுத்தினார். பின்னர் மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். மாணவி பொன் மீரா நன்றி கூறினார்.

மாணவிகள் பேரவை துணை தலைவர் அனுஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சாரதா கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள், கல்வியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News