உள்ளூர் செய்திகள்
கோவை அருகே வேலையை விட்டு நீக்கியதால் காவலாளி தற்கொலை
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு சின்னசாமி கம்பெனியில் மது குடித்து விட்டு பிரச்சினை செய்தார்.
- சின்னசாமி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை அருகே உள்ள பச்சாப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காந்திமதி. கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சின்னசாமி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர் கம்பெனியில் மது குடித்து விட்டு பிரச்சினை செய்தார்.
இதனால் கம்பெனி நிர்வாகம் சின்னசாமியை வேலையை வீட்டு நீக்கியது. இதன்காரணமாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சின்னசாமி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.