உள்ளூர் செய்திகள்

மாணவரை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்பு படையினர்.

தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

Published On 2022-09-15 06:57 GMT   |   Update On 2022-09-15 06:57 GMT
  • அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
  • திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலம் தென்பெண்ணை யாறு எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் நேற்று மாலை விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவரும் சக மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது விழுப்புரம் தோகைபாடி கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலு வலர் சுந்தரராஜன், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகா ரிகள் வேல்முருகன், பாஸ்கரன் போட் மூல மாகவும் வீரர்கள் மாண வனின் உடலை 2-வது நாளாக தொடர்ச்சியாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் மற்றும் அதிகாரிகள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News