தமிழ்நாடு செய்திகள்
ஜனவரி 5-ந்தேதி அ.ம.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
- கழகத் தலைவர் கோபால் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
- அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமையன்று காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.
அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.