உள்ளூர் செய்திகள்

வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும்

Published On 2023-05-25 08:15 GMT   |   Update On 2023-05-25 08:15 GMT
  • குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.
  • கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு. சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.

குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.

எனவே மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும்.

மேலும் கல்வி துறையின் அறிவுறுத்தலை மீறி சட்ட விரோதமாக கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News