உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகளை படத்தில் காணலாம்.

திட்டக்குடியில் போக்குவரத்து நெரிசல் சிக்கி தவிக்கும் பள்ளி வாகனங்கள்

Published On 2022-09-21 08:03 GMT   |   Update On 2022-09-21 08:03 GMT
  • அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருவதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது.
  • மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கடலூர், அரியலூர் மாவட்டத்தை இனைக்கும் வெள்ளாற்றில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சேந்தம ங்கலம் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்கும் பணி கடந்தவாரம் துவங்கி யது. இந்நிலையில் வெளி மாவட்டத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருவதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இரண்டு மாவட்டத்திற்கும் பொது மக்களின் போக்குவரத்தும் 2 மாவட்டங்களில் இரு ந்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினந்தோறும் சென்று வருகின்றனர். இன்று வழக்கம்போல் காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை ஏற்றி க்கொண்டு பள்ளிக்கு வாகனங்கள் வந்தன.

அப்போது மணல் ஏற்றி வரும் லாரிகள் வெள்ளாற்றில் தரைப்பாலத்தில் நிறுத்திக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக செல்வது மட்டுமல்லாமல் லாரிகள் சாலையின் குறுக்கே நிறுத்து வதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாமல் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் வெகுநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தலையிட்டு மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லும் வேலையில் இந்த கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் அரசு மணல் குவாரி இங்கு இயங்க தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News