சாலையில் கிடந்த செல்போன், ஆதார் அட்டையை போலீசில் ஒப்படைந்த பள்ளி குழந்தைகள்
- மூன்று பள்ளி மாணவர்கள் நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்துள்ளனர்.
- செல்போன், ஆதார் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை கண்டதும் எடுத்து சென்று அருகே உள்ள குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான கனகவேல், லோகேஷ், மாதவன் ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள் நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்துள்ளனர்.
அப்போது சாலையில் யாரும் இல்லாத இடத்தில் செல்போன், ஆதார் அட்டை கிடந்துள்ளது. இதை கண்ட பள்ளி குழந்தைகள் கீழே கிடந்த செல்போன், ஆதார் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை கண்டதும் எடுத்து சென்று அருகே உள்ள குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்களை நேரில் அழைத்து மாணவர்களின் நேர்மையான செயலை பாராட்டினார்.
மேலும் பள்ளி மாணவர்களின் நேர்மை மற்றும் தைரியத்தை பாராட்டி நினைவு பரிசு வழங்கி ஊக்கமளித்தார். பொதுமக்கள், ஆசிரியர்களும் மாணவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.