உள்ளூர் செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோருக்கு புதிய திட்டம்- காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

Published On 2023-05-25 08:04 GMT   |   Update On 2023-05-25 08:04 GMT
  • அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சிவருத்ரய்யா (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோர் தொடங்கவிருக்கும், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.

இதற்கு தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 044 27238837, 27238551 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது 7904559090, 95669 90779 செல்போன் எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News