உள்ளூர் செய்திகள்

அரங்கேறியது மந்திரி சபை மாற்றமா? முடிசூட்டும் விழாவா?: சசிகலா

Published On 2022-12-15 02:30 GMT   |   Update On 2022-12-15 02:30 GMT
  • தி.மு.க.வுக்காக உழைத்தவர்கள் கடைகோடியில் நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.
  • ஜனநாயகத்தில் மன்னராட்சியை கொண்டுவந்த பெருமை தி.மு.க.வையே சாரும்.

சென்னை

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு கருத்து தெரிவித்து, சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

புயல், மழை, வெள்ளத்தால் விவசாயிகள் படும்பாடு, மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. வீடு, வாசலை இழந்து தங்குவதற்கு இடம் இன்றி மக்கள் தவித்து வருகிறார்கள். மக்கள் பணிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவசரகால பணியாக முடிசூட்டு விழா நடந்திருக்கிறது. தி.மு.க.வினர் அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? முடிசூட்டும் விழாவா? என்று தெரியவில்லை. தங்கள் ஆட்சி முடிவதற்குள் வரிசையில் உள்ள அடுத்த வாரிசின் முடிசூட்டு விழாவும் நடந்தேறும்.

ஜனநாயகத்தில் மன்னராட்சியை கொண்டுவந்த பெருமை தி.மு.க.வையே சாரும். தி.மு.க.வுக்காக பாடுபட்ட எத்தனையோ அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள், திறமையானவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் வாய் திறக்கமுடியாமல் மவுனமாக இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தி.மு.க.வுக்காக உழைத்தவர்கள் கடைகோடியில் நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான். இதைத்தான் திராவிட மாடலாக பார்க்க முடிகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News