சப்பர பவனி நடந்த போது எடுத்த படம்
கடையம் அருகே ராமர் கோவில் திருவிழாவில் சப்பர பவனி
- கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் மயிலப்பபுரத்தில் பிரசித்தி பெற்ற ராமர் கோவில் உள்ளது.
- இன்று அதிகாலையில் ராமர் கருட வாகனத்தில் வீதி உலா செல்லும் சப்பர பவனி நடைபெற்றது.
கடையம்:
கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் மயிலப்பபுரத்தில் பிரசித்தி பெற்ற ராமர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் அன்னதானம் நடைபெற்றது. 8-ம் திருநாளை முன்னிட்டு பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு அன்னதானத்துடன் ராமர் குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று 10-ம் திருநாளை முன்னிட்டு மாபெரும் பால்குட ஊர்வலமும், இரவில் அன்னதானமும், சிறுவர்- சிறுமிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலையில் ராமர் கருட வாகனத்தில் வீதி உலா செல்லும் சப்பர பவனி நடைபெற்றது. இதில் மயிலப்பபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மயிலப்பபுரம் ராமர் கோவில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.