உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கிய போது எடுத்தபடம்.

வாசுதேவநல்லூரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

Published On 2023-01-01 09:10 GMT   |   Update On 2023-01-01 09:10 GMT
  • இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்தில் 500 மரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

சிவகிரி:

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்தில் 500 மரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், பேரூர் செயலாளர் ரூபிபாலா, இளைஞரணி முனீஸ்வரன், டாக்டர் கிருஷ்ணா, செல்வம், மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ஜெயப்பிரகாஷ், நிர்வாக உறுப்பினர் துரைப்பாண்டி, வாசுதேவநல்லூர் தன்னார்வல இளைஞர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News