உள்ளூர் செய்திகள்

போராட்டம் நடந்த போது எடுத்த படம்.


கடையநல்லூரில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2023-02-20 12:42 IST   |   Update On 2023-02-20 12:42:00 IST
  • கடையநல்லூர் நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை கொண்டது.
  • நகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை கொண்டது. இதில் 17 வார்டுகளில் தனியார் தூய்மை தொழிலாளர்கள் 82 பேர் பணி புரிகிறார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.340 ரூபாய் வீதம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள கூலி உயர்வு, பி.எப். பணம், ஈ.எஸ்.ஐ மருத்துவ காப்பீட்டு அட்டை, சீருடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பி.எப். பணம், ஈ.எஸ்.ஐ மருத்துவ காப்பீட்டு அட்டை, சம்பள உயர்வு கேட்டு கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. குப்பைகளை அள்ளும் எலக்ட்ரிக் வாகனம் பழுதடைந்தால் தொழி லாளர்களே அதனை சரி செய்ய வேண்டுமென தனியார் நிறுவனம் கூறு வதாக கூறி அதனை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதுகுறித்து நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தனியார் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நிரந்தர துப்புரவு தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடை பெற்று வருவதாக நகராட்சி சுகாதார அலுவலர் தெரிவித்தார்.

Tags:    

Similar News