உள்ளூர் செய்திகள்

டவுன் தென்பத்து பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பு அகற்றும் பணி நடைபெற்ற போது எடுத்தபடம்.

காய்ச்சல் பரவலை தடுக்க நெல்லை மாநகர பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரம்-கமிஷனர் நடவடிக்கை

Published On 2023-02-09 14:54 IST   |   Update On 2023-02-09 14:54:00 IST
  • பொக்லைன் எந்திரம் மூலமாக கால்வாய் ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்றது.
  • குடி தண்ணீரின் தரம் குறித்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட 26- வது வார்டு பகுதியான டவுன் தென்பத்து பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் படி கவுன்சிலர் பிரபா சங்கரி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்படி கமிஷனரின் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலமாக அப் பகுதியில் உள்ள கால்வாய் ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்றது.

சமீபத்தில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் சுகாதாரத் துறையினர் உடனான கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் மாநகரப் பகுதியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக தடுக்கும் விதமாக ஓடைகள் தூர்வாருதல், சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடப்பதை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வைத்துள்ள குடி தண்ணீரில் தரம் உள்ளிட்டவை வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பிளிச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News