உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கேடயம் வழங்கப்பட்ட காட்சி.

ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

Published On 2023-01-14 15:06 IST   |   Update On 2023-01-14 15:06:00 IST
  • சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏ.கே.ஒய். செய்யது அப்துல் காதர் தலைமை தாங்கினார்.
  • விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

நெல்லை:

நெல்லை ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் ஏ.கே.ஒய். செய்யது அப்துல் காதர் தலைமை தாங்கி உழவு தொழிலின் பெருமை குறித்து பேசினார்.

கல்லூரி துணை தலைவர் ஷேக் செய்யது அப்துல்லாஹ், கல்லூரி இயக்குனர்கள் செய்யது முஹம்மது, செய்யது முஹம்மது, அப்துல் வாஹாப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் அயூப் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக நெல்லை அரசு வக்கீல் சங்கர் கலந்து கொண்டு தமிழர் பண்பாடு மற்றும் உறவுகளின் பலம் குறித்து விளக்கி பேசினார். இதில் ஹனிபா, ராஜ்குமார், வக்கீல் காந்தாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவினை மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் மற்றும் வானொலி அறிவிப்பாளர் இசக்கி முத்தையா தொகுத்து வழங்கினார். பாடகர் சடகோபன் நம்பி அனைத்து சமய பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை உற்சாக படுத்தினார்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு உறியடி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயங்கள் வழங்கி பாராட்டினர்.

முன்னதாக கல்லூரி பேராசிரியர்கள், மாண விகள் பொங்கலிட்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் முஹம்மது மதார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News