- புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பெரும்பாலோனார் கறி சாப்பிடுவதை தவிர்ப்பார்கள்.
- கடந்த 16-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 114
சேலம்
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வழக்கமாக புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பெரும்பாலோனார் கறி சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். இதனால் கறிக்கோழி விலை வழக்கமாக குறையும். அதன்படி தற்போது கறிக்கோழி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை உயிருடன் 114 ஆக இருந்தது. பின்னர் அதன் விலை படிப்படியாக குறைந்து தற்போது 106 ரூபாயாக உள்ளது. இதனால் ஒரே வாரத்தில் 8 ரூபாய் குறைந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில்சி ல்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ உரித்த கோழி 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இனி வரும்நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. முட்டை கோழிவிலை கடந்த சில நாட்களாக 92 ரூபாயாக நீடிக்கிறது. முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த 19-ந் தேதி முதல் 490 காசுகளாக நீடிப்பது குறிப்பிடதக்கது.