சமையல் தொழிலாளியை தாக்கி ரூ.20 ஆயிரம் பறித்த 3 பேர் மீது வழக்கு
- ராதா என்பவருக்கும் பூமாலை என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராதா குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து தம்பி அபிஷேக் குடும்பத்தினரு டன் வசித்து வருகிறார்.
சங்ககிரி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா படவீடு கிராமம் அல்லி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் பிரபாகரன் (36) சமையல் தொழிலாளி.
இவரது அக்கா ராதா என்பவருக்கும் சங்ககிரி அருகே வளைய செட்டிபாளையத்தைச் சேர்ந்த பூமாலை என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராதா குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து தம்பி அபிஷேக் குடும்பத்தினரு டன் வசித்து வருகிறார். ராதா வடுகப்பட்டி அரசு மருத்துவமனை மூலம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8.45 மணிக்கு அபிஷேக் தனது அக்கா ராதாவை வடுகப்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் பக்கத்தில் பணி செய்ய இறக்கிவிட்டு அங்கு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அக்கமாபேட்டையைச் சேர்ந்த அசோகன் என்பவர் அபிஷேக்கை பார்த்து உன் அக்காவை அவரது கணவருடன் பிழைக்க விட மாட்டியா? என திட்டியும், அருகில் கிடந்த தென்னம்மட்டையை எடுத்து தலையில் அடித்ததா கவும் கூறப்படுகிறது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சிவன், ராஜதுரை ஆகியோரும் அபிஷேக்கை மாறி மாறி தாக்கி அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டதாக தெரிகிறது.
காயமடைந்த அபிஷேக் பிரபாகரனை அருகில் இருந்தவர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து அபிஷேக்பிர பாகரன் நேற்று சங்ககிரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அசோகன், சிவம், ராஜதுரை ஆகிய 3 பேர் மீதும் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.