உள்ளூர் செய்திகள்

சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் நாளை ரத்து

Published On 2023-04-27 14:30 IST   |   Update On 2023-04-27 14:30:00 IST
  • சின்ன சேலம்- புக்கிர வாரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பாதையில் உள்ள கேட் பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடை பெறுகிறது.
  • சேலம்-விருத்தாசலம் பாதையில் நாளை இயக்கப்படும் ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சேலம்:

சின்ன சேலம்- புக்கிர வாரி ரெயில் நிலையங்க ளுக்கு இடையே தண்டவாள பாதையில் உள்ள கேட் பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடை பெறுகிறது. இதையொட்டி சேலம்-விருத்தாசலம் பாதையில் நாளை இயக்கப்படும் ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி விருத்தாச்ச லம்-சேலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06121) நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06896) நாளை முழுவ துமாக ரத்து செய்யப்படு கிறது.

திருப்பத்தூர்-குப்பம் ரெயில்வே பாதை பச்சூர்-மூலனூர் ரெயில் நிலை யங்களுக்கு இடையே ரெயில்வே கேட் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.இதையொட்டி சில ரெயில் கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16526) நாளை (வெள்ளிக்கி ழமை) மற்றும் நாளை மறு நாள் (சனிக்கிழமை) மாற்றுப் பாதையான பெங்களூரு கண்டோன்மென்ட் வழியாக சேலம் வந்தடையும். அதா வது ஓசூர், தர்மபுரி, ஓமலூர் வழியாக சேலம் வந்தடையும். இந்த ரெயில் கிருஷ்ணரா ஜபுரம், ஒயிட்பீல்டு, மாலூர், பங்காருபேட்டை குப்பம், திருப்பூர் வழியாக செல்லாது.

இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவ லகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News