பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்.
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு3 லிட்டர் பெட்ரோலுடன் வந்த பெண் - பரபரப்பு
- ஆத்தூர் வடசென்னிமலை காட்டுக்கோட்டை கடலூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி சாந்தி.
- இன்று காலை மனு கொடுப்பதற்காக 3 லிட்டர் பெட்ரோலுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வடசென்னிமலை காட்டுக்கோட்டை கடலூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவரு டைய மனைவி சாந்தி.
இவர் இன்று காலை மனு கொடுப்பதற்காக 3 லிட்டர் பெட்ரோலுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பிரதான நுழைவு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திடீரென 3 லிட்டர் பெட்ரோலை போலீசாரிடம் ஒப்படைத்து எனது மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
நான், கடந்த 2008 -ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து நிலம் வாங்கி கிரையம் செய்தேன். இந்த நிலையில் தாதகாப்பட்டியை சேர்ந்த ஒருவர், எனக்கு விற்பனை செய்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பல பிரச்சினை ஏற்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே வாழப்பாடி யில் ஒரு பெண்ணை எரித்து நிலத்தை அபகரித்து 3 மாதம் ஜெயிலில் இருந்ததுபோல் உன்னையும் எரித்து கொன்று விடுவேன். எனவே அந்த நிலத்தை தனக்கு எழுதி கொடு. இல்லையென்றால் கொன்று விடுவதாக அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார்.
எனவே அவர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.