வாலிபரிடம் நூதன முறையில் செல்போன் பறித்த கும்பல்
- தினேஷ் (வயது 24). இவர் நேற்று இரவு 9.30 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் முத்து நாயக்கன்பட்டி பர்ன் அண்ட் கோ அருகே வந்து கொண்டிருந்தார்.
- அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் எதிரே வந்த 3 வாலிபர்கள் தினேஷை நிறுத்தி அவசரமாக போன் செய்ய வேண்டும், சற்று உங்கள் செல்போனை தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள மல்ல மூப்பம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த செல்வ ராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 24). இவர் நேற்று இரவு 9.30 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் முத்து நாயக்கன்பட்டி பர்ன் அண்ட் கோ அருகே வந்து கொண்டி ருந்தார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் எதிரே வந்த 3 வாலிபர்கள் தினேஷை நிறுத்தி அவசர மாக போன் செய்ய வேண்டும், சற்று உங்கள் செல்போனை தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு தினேஷ் நம்பரை சொல்லுங்கள் நான் போட்டு தருகிறேன் என்று கூறியுள் ளார். அப்போது அந்த கும்பலில் ஒருவர் திடீரென தினேஷை தாக்கி அவரது கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.