உள்ளூர் செய்திகள்

கைதான போலி வைத்தியர் சரவணன்

மாணவியிடம் அத்துமீறிய போலி வைத்தியர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-08-10 07:08 GMT   |   Update On 2023-08-10 07:08 GMT
  • பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
  • வெள்ளாண்டிவலசு அருகே உள்ள நைனாம்பட்டி ரோடு தெருவை சேர்ந்த சித்த வைத்தியர் சரவணன் மாண வியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் -1 வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 6-ந் தேதி பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வெள்ளாண்டிவலசு அருகே உள்ள நைனாம்பட்டி ரோடு தெருவை சேர்ந்த சித்த வைத்தியர் சரவணன் மாண வியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

தனது தந்தைக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் வைத்தியர் சரவணனை மாணவியும் வீட்டிற்குள் அனுமதித்து உள்ளார்.

அத்துமீறல்

அப்போது சரவணன் மனைவியை பார்த்து ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

அதற்கு மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார்.

உடனே சரவணன் உனக்கு முதுகில் உள்ள ஒரு நரம்பில் சுளுக்கு இருக்கிறது. அதை சரி செய்ய தைலம் தடவுவதாக கூறி மாணவி யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரை தள்ளிவிட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்து பக்கத்து வீட்டில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

தர்மஅடி

பொதுமக்கள் வருவதை கண்டு வைத்தியர் சரவணன் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கடந்த சில நாட்களாக யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக இருந்த சரவணன், நேற்று மீண்டும் ஊருக்குள் வந்துள்ளார். அவரை சுற்றி வளைத்த அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து எடப்பாடி போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

புகார்

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சரவணன் வைத்தியர் இல்லை என்பதும், போலி யாக பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக கூறி மக்களை ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது.

பொதுமக்கள் தாக்கிய தால் காயம் அடைந்த சரவ ணன் தற்போது எடப்பாடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News