உள்ளூர் செய்திகள்

சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-11 14:41 IST   |   Update On 2023-10-11 14:41:00 IST
  • கிராம நிர்வாக அலுவலராக இருந்த கண்ணன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
  • இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சேலம் ஆர்.டி.ஓ.வை கடந்த 29-ந் தேதி நேரில் சந்தித்து கண்ணன் பணியிட நீக்க உத்தரவினை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.

சங்ககிரி:

கிராம நிர்வாக அலுவலராக இருந்த கண்ணன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சேலம் ஆர்.டி.ஓ.வை கடந்த 29-ந் தேதி நேரில் சந்தித்து கண்ணன் பணியிட நீக்க உத்தரவினை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.

ஆர்ப்பாட்டம்

இதனை கண்டித்து நேற்று மாலை சங்ககிரி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சங்ககிரி வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்ககிரி வட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்ட பிரசார செயலாளர் முருகன், கோட்டச் செயலாளர் பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை கண்டிக்கிறோம். இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ேகாஷம் எழுப்பினர். இதில் சங்ககிரி வட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

மேட்டூர்

கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். இதில் முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கர்ணனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் மீண்டும் அதே பகுதியில் பணிய மர்த்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள் அறிவழகன், சுதா, ராஜேஸ்வரி, சசிகுமார், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓமலூர்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News