உள்ளூர் செய்திகள்

சேலம் சுகவனேசுவரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி.

வைகாசி விசாகத்தையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

Published On 2023-06-02 09:19 GMT   |   Update On 2023-06-02 09:19 GMT
  • சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்றதும், மிகப் பழமை வாய்ந்ததுமான சுகவ னேஸ்வரர் கோவில் உள்ளது.
  • விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது.

சேலம்:

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்றதும், மிகப் பழமை வாய்ந்ததுமான சுகவ னேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி யது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

இரவு நேரத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை ஒட்டி சுகவனேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணியளவில் சுகவனேஸ்வ ரருக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவ மூர்த்தியான சுகவனேஸ்வ ரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு பட்டு ஆடைகள் உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ராஜகணபதி கோவில் முன்பு உள்ள, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க அர்ச்ச னைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு திருத்தே ரோட்டம் தொடங்கியது. அங்கு கூடியிருந்த பக்தர் கள் நமச்சிவாயா நமச்சி வாயா என கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேரானது ராஜகண பதி கோவிலில் தொடங்கி, 2-வது அக்ரஹாரம், சின்ன கடைவீதி, முதல் அக்ரஹாரம் வழியாக பவனி வந்து மீண்டும் ராஜ கணபதி கோவில் அருகே வந்தடைந்தது.

தேர் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருத்தேர் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, இன்று அந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News