உள்ளூர் செய்திகள்

சாலைகள் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

சேலம் செவ்வாய்பேட்டையில் குண்டும், குழியுமாக கிடக்கும் சாலை

Published On 2023-10-17 09:45 GMT   |   Update On 2023-10-17 09:45 GMT
  • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.
  • இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.

இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனிடையே சேலம் மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக அங்குள்ள அக்ரஹாரம் தெருவில் நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகள் அரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

நேற்று பெய்த மழையால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதினர் கூறும் போது சம்பந்தப்பட்ட அக்ரஹார தெருக்களில் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது.

இது குறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும் மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கப்படவில்லை. எனவே சாலையை சரிசெய்து தரவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News