உள்ளூர் செய்திகள்

சேலம் மார்க்கெட்டுகளில் தக்காளி விலை 80 ரூபாயாக உயர்வு

Published On 2023-08-14 07:30 GMT   |   Update On 2023-08-14 07:30 GMT
  • காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
  • தக்காளி வரத்து அதிகரித்ததால் படிப்படியாக விலை சரிந்து நேற்று முன்தினம் , முதல் தர தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையானது.

சேலம்:

சேலம் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிக பட்சமாக 160 ரூபாய் வரை விற்பனையானது. பின்னர் வரத்து அதிகரித்ததால் படிப்படியாக விலை சரிந்து நேற்று முன்தினம் , முதல் தர தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும்விலை உயர்ந்து ஒரு கிலோ முதல் தர தக்காளி 80 ரூபாய்க்கும், 2-ம் தரம் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மற்ற காய்கிறிகளில் விலை விவரம் வருமாறு-

சின்னவெங்காயம் 60 முதல் 80, கேரட் 100-120, கத்திரி 40-60, பச்சை மிளகாய் 100-120, வெண்டைக்காய் 40-50, உருளை கிழக்கு 40-60, பெரிய வெங்காயம் 25-30, பீன்ஸ் 100-110, முருங்கைக்காய் 40-60, இஞ்சி ஒரு கிலோ 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Tags:    

Similar News