உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தீவட்டிபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

Published On 2023-07-13 12:44 IST   |   Update On 2023-07-13 12:44:00 IST
  • தீவட்டிபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தீவட்டிபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் குமார் வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார்.

பொம்மியம்பட்டியில் கடந்த 15 ஆண்டு காலமாக மூடியுள்ள மாரியம்மன் கோவிலை திறக்க கோரியும், ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், எலத்தூர் கிராமத்தில் பட்டா வழங்காமல் கடந்த 20 ஆண்டாக காலம் தாழ்த்தி வருவது கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஆறுமுகம், மணிக்குமார், வீரமணி, முனுசாமி, மதியழகன், தெய்வானை, வீரம்மாள், ஆராயி, நகர செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News