உள்ளூர் செய்திகள்

சூரசம்ஹாரத்தின்போது மகுடஞ்சாவடி சுப்ரமணிய சாமியை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்த காட்சி. 

சுப்ரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா

Published On 2023-11-19 08:16 GMT   |   Update On 2023-11-19 08:16 GMT
  • சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருக்கல்யாணம்

கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (சனிக்கிழமை) மாலை வான வேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் வள்ளி- தெய்வானை வசந்த் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலையில் 6-ம் ஆண்டு குண்டம் தீ மிதி விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுப்ரமணிய சாமி ஆசி பெற விழா கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News