உள்ளூர் செய்திகள்

ஊரக வேலை உறுதி திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து அனைத்து விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சேலத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-11 15:20 IST   |   Update On 2023-10-11 15:20:00 IST
  • அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சேலம் கொண்டலாம்பட்டி இந்தியன் வங்கி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் ஜோதி பாசு தலைமை தாங்கினார்.

சேலம்:

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சேலம் கொண்டலாம்பட்டி இந்தியன் வங்கி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் ஜோதி பாசு தலைமை தாங்கினார். இதில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காமல் அரசு வஞ்சித்து வருகிறது. எனவே சம்பள பணத்தை வழங்க வேண்டும். அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் உடனே வேலை கொடுக்க வேண்டும், வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வரும் அமானி கொண்டலாம்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, எஸ். ஆட்டையாம்பட்டி ஏழை மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News