உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும்

Published On 2023-10-10 07:23 GMT   |   Update On 2023-10-10 07:23 GMT
  • பல ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் 2ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
  • அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களில் பல நூறு குறு, சிறுதொழில்கள் முடங்கி விட்டன. பலர் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட சிறு குறு தொழில் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டரிம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு, உச்ச நேர மின் கட்டண அறிவிப்பு மற்றும் நிலைக் கட்டண உயர்வு போன்ற கோரிக்கைகளை நீக்க வலியுறுத்தி தமிழக தொழிற்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தி எங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தோம்.

பல ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் 2ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களில் பல நூறு குறு, சிறுதொழில்கள் முடங்கி விட்டன. பலர் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர். குறு, சிறுதொழில்களை நம்பி தொழில்முனைவோர்களும், பல லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மின்சாரத்தை நம்பியே உள்ளது. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை வழங்கி வரும் சிறுதொழில்கள் மின் கட்டண உயர்வால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீதான மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு கொடுக்கும் போது மாவட்ட சிறு, குறு தொழில் சங்க தலைவர் இளங்கோ, லாரி பாடி பில்டர் சங்க தலைவர் தங்கவேல், தேங்காய் நார் சங்க தலைவர் குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News