உள்ளூர் செய்திகள்
சேலத்தில் சிறுமி கர்ப்பம் வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை
- விஷ்வா (25). இவர் கிருஷ்ணகிரியில் வேலை பார்க்கும் போது அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
- இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்வா (25). இவர் கிருஷ்ணகிரியில் வேலை பார்க்கும் போது அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை குழந்தையுடன் அழைத்து வந்து அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் அருகே வீடு பார்த்து குடியேறி வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே தெருவில் வசிக்கும் 40 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணின் 16 வயது மகளுடன் பழகி வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விஷ்வாவை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.