உள்ளூர் செய்திகள்

ஏலத்திற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் கொப்பரை பருப்பு

வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2023-06-22 09:58 GMT   |   Update On 2023-06-22 09:58 GMT
  • வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
  • மறைமுக ஏலத்தில் 1.30 டன் தேங்காய் பருப்பு ரூ.78 ஆயிரத்துக்கு விற்பனையானது.

வாழப்பாடி:

சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

முதல் தர பருப்பு மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்திலும், 2, 3-ம் தர பருப்பு, மறைமுக ஏலத்தி லும் விவசாயி களிடம் இருந்து கொள் முதல் செய்யப்பட்டது.

மறைமுக ஏலத்தில் 1.30 டன் தேங்காய் பருப்பு ரூ.78 ஆயிரத்துக்கு விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.65.65 வரையும், 3-ம் தரம் ரூ.58.05 வரையும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் சேலம், நாமக்கல், வெள்ளக் கோயில் மற்றும் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

வாழப்பாடி பகுதியில் தேங்காய் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள், வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, மத்திய அரசின் ஆதரவு விலை பெறலாம்.

நேரடியாக வியாபாரி களிடம் ஏல முறையில் விற்பனை செய்து பயன் பெறலாம் என, விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

Tags:    

Similar News