உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில்குழந்தை பிறந்த 4 நாட்களில் இளம்பெண் திடீர் சாவு

Published On 2023-07-06 09:14 GMT   |   Update On 2023-07-06 09:14 GMT
  • கோவிந்தம்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் செல்லக்கருப்பன்.
  • இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் கோவிந்தம்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் செல்லக்கருப்பன். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே தனலட்சுமி 2-வதாக கர்ப்பம் தரித்தார். அவருக்கு கடந்த 30-ந் தேதி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தனலட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தனலட்சுமி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

குழந்தை பிறந்த 4 நாட்களிலேயே அவர் திடீரென இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

புகார்

இதனால் தனலட்சுமியின் உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி மீது புகார் கூறியுள்ளனர். இதையடுத்து சுகாதார துறை அதிகாரி ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். தனலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவருக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்துகள், மாத்திரைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பிரசவம் பார்த்த டாக்டர் மற்றும் நர்சுகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், தலைவாசல் போலீசார், தனலட்சுமி இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News