சேலத்தில் வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய கொள்ளையன்
- நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டின் மேற்கூறையில் ஏறி ஓட்டை பிரித்து விட்டு வீட்டுக்குள் புகுந்தார்.
- சத்தத்தை கேட்டு கண்விழித்த மோகன்ராம் மற்றும் அக்கம் பக்கத்தினர் மர்ம நபரை பிடிக்க முயன்றனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை அருகே உள்ள பொன்னம்மாப்பேட்டை கணபதி தெருவை சேர்ந்தவர் மோகன்ராம் (வயது 72). இவரது மனைவி வத்சலா ( 68). இந்த தம்பதி நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டின் மேற்கூறையில் ஏறி ஓட்டை பிரித்து விட்டு வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மோகன்ராம் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனை திருடிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற முற்படும்போது திடீரென வத்சலா கண் விழித்தார். அவர் திருடனை பார்த்ததும் கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு கண்விழித்த மோகன்ராம் மற்றும் அக்கம் பக்கத்தினர் மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து மோகன்ராம் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.