உள்ளூர் செய்திகள்

எடப்பாடி அருகே பழக்கடை பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2023-08-16 12:39 IST   |   Update On 2023-08-16 12:39:00 IST
  • எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு, நைனாபட்டி ரோட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (37). இவர் எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

பூட்டு உடைப்பு

நேற்று முன்தினம் வழக்கம்போல் கவிதா கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விழித்துக் கொண்டதால் கொள்ளையடித்த பொருள்களின் ஒரு பகுதியை கடை அருகிலேயே போட்டு விட்டு சம்பந்தப்பட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவு நேரத்தில் கவிதாவின் கடைக்குள் நுழையும் மர்ம நபர் 3 முறை பெரிய அளவிலான பைகளில், அங்கிருந்த பழம் மற்றும் பொருட்களை அள்ளிச் செல்வது பதிவாகி உள்ளது.

இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பழக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து, எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் கொள்ளை

மேலும் அண்மையில் கவிதாவின் பழக்கடை அருகே உள்ள சேகர் (48) என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

சேலம் - எடப்பாடி பிரதான சாலையில் தொடர்ந்து பழக்கடைகளை குறிவைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News