உள்ளூர் செய்திகள்

3-வது முறையாக முகநூல் காதலனை தேடி சேலத்திற்கு வந்த சிறுமி

Published On 2023-06-24 15:04 IST   |   Update On 2023-06-24 15:04:00 IST
  • மணிகண்டன் (வயது 23). இவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது சிறுமி முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலையில் மணிகண்டனை தேடி நேற்று இரவு சிறுமி சேலத்திற்கு வந்தார்.

சேலம்:

சேலம் மத்திய சிறை பின்புறம் உள்ள திருநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23). இவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது சிறுமி முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டனை தேடி நேற்று இரவு சிறுமி சேலத்திற்கு வந்தார்.

இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோர் உடனடியாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு விசாரித்தனர். இதில், 3-வது முறையாக காதலனை தேடி சேலத்திற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமிக்கு தகுந்த அறிவுரை கூறி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், சிறுமியின் பெற்றோர் தற்போது சேலத்திற்கு வந்து கொண்டி ருக்கின்றனர். அவர்கள் வந்ததும் சிறுமி பெற்றோ ரிடம் ஒப்படைக்கப்படுவார் என போலீஸ் தெரிவித்தனர். 

Tags:    

Similar News