தீப திருவிழாவில் 500 பெண்கள் விளக்கை கையில் ஏந்தி ஊர்வலம்
- சேலம் குமாரசாமிப்பட்டி பகுதி எல்லம்மன் கோவில் வளாகத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.
- இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீப திருவிழாவில் திருமணம் ஆகாத பெண்கள் மாங்கல்ய வரன் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் குடும்பம் நலம் பெறவும்,ஊர் செழிக்க வேண்டி நடைபெற்ற தீப திருவீதி உலா நடைபெற்றது.
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி பகுதி எல்லம்மன் கோவில் வளாகத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். தொடர் நிகழ்ச்சியாக சக்தி அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், சக்தி கரகம் அக்னி கரகமும் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீப திருவிழாவில் திருமணம் ஆகாத பெண்கள் மாங்கல்ய வரன் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் குடும்பம் நலம் பெறவும்,ஊர் செழிக்க வேண்டி நடைபெற்ற தீப திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கைகளில் விளக்கு ஏந்தியபடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைந்த பெண்கள் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர் நிகழ்ச்சி இறுதியில் அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.