ஏலக்காய், மிளகு வாங்கி ரூ.14.45 லட்சம் மோசடி
- சரக்குகளை பெற்றுக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றினர்
- கோவை பெண் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை.
சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 48). இவர் கோவை ராமநாதபுரம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் சென்னையில் ஏலக்காய்-மிளகு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். இந்த நிலையில் கோவை ராமநாதபுரம், கொங்கு நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் என்னை தொடர்பு கொண்டு, நாங்கள் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏலக்காய், மிளகு ஆகிய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம் என்று கூறினர். இதனை நம்பிய நான் கோவைக்கு புறப்பட்டு வந்தேன்.
அங்குள்ள அலுவ லகத்தில் இருந்த புருஷோத்த மன், மோசஸ்மேத்யூ, காஜாஉசேன், மருதாசலம், கீதாஞ்சலி, பரத், ஆனந்த் உள்பட 7 பேரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ.14 லட்சத்து 45 ஆயிரத்து 718 மதிப்பில் ஏலக்காய், மிளகு ஆகியவற்றை அனுப்பி வைத்தேன்.
சரக்குகளை பெற்று க்கொண்ட அவர்கள், இதற்கான பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்ற னர். எனவே சம்பந்தப்பட்ட வர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.