உள்ளூர் செய்திகள்
மேலப்பாளையத்தில் கடையில் பணம் கொள்ளை
- மேலப்பாளையம் ரோஸ்நகரை சேர்ந்த ஜெனி சாமுவேல் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார்.
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை:
மேலப்பாளையம் ரோஸ்நகரை சேர்ந்தவர் ஜெனி சாமுவேல் (வயது 22). இவர் மேலப்பாளையத்தில் கடை நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.21,500 கொள்ளை போயிருந்தது. மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து அவர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.