உள்ளூர் செய்திகள்
சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சாலை அமைக்கும் பணிகள் - அதிகாரிகள் ஆய்வு
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சாலை ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பொறக்குடியிலிருந்து பரமநல்லூர் மேனாங்குடி வரையிலான சாலை 2650 மீட்டர் தொலைவிற்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சாலை ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளைதிரு மருகல் ஒன்றிய பொறியாளர்கள் கவிதாராணி, செந்தில் ஆகியோர் பார்வையிட்டு சாலை அகலம் மற்றும் உயரம் அரசு அறிவித்த அளவிற்கு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.
பின்னர் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.இந்த ஆய்வின்போது சாலை ஆய்வாளர் விமலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.